விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்: அரசின் நடவடிக்கை என்ன? அமைச்சர் பதில்

விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அண்மைக்காலங்களில் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்க:7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று (அக்.16) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய விமானங்களை குறிவைத்து அண்மைக்காலங்களில் வெளிவரும் மிரட்டல்கள் கவலையளிக்கின்றன. இதன்காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவுடன் கடந்த 14-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சட்ட அமலாக்க முகமைகள் இதுதொடர்பான புகார்களை தீவிரமாக விசாரித்து வருகின்றன.

அண்மையில், 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த, 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் ஒருவனை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கனடாவில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

இதையும் படிக்க:விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்கில் விசாரணையைத் தொடங்கிய போலீஸார்!

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!