விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்கில் விசாரணையைத் தொடங்கிய போலீஸார்!

புதுதில்லி: கடந்த 2 நாட்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து தில்லி போலீஸார் இன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற ஆகாசா ஏர் விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்தில் திரும்பியதும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டு விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சமூக ஊடகங்கள் மூலம் வெவ்வேறு விமானங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்ததால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 319 புள்ளிகளுடனும், நிஃப்டி 86.05 புள்ளிகளுடன் சரிந்து நிறைவுற்ற பங்குச் சந்தை

கடந்த 2 நாட்களில், சில சர்வதேச விமானங்கள் உள்பட 12 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில் விமானங்களில் சந்தேகத்திற்கிடமான எதுவும் தென்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கிடையில், பல்வேறு விமான நிறுவனங்களுக்கு புரளி அச்சுறுத்தல்கள் குறித்த பிரச்சினை நாடாளுமன்றக் குழுவின் முன் வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!