இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் புறநகர் மீது விமானப் படை விமானங்கள் பறந்தததை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு அக்.1 முதல் அக்.6-ஆம் தேதி வரை மெரீனா கடற்கரை, விமான நிலைய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விமான சாகச நிகழ்ச்சியைக் காண சென்னை மட்டுமல்லாமல், அண்டை மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானப் படை விமானங்கள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானைக் கிழித்துக் கொண்டு பறந்து சென்றதை மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதையும் படிக்க.. 2018-ல் சென்னையை உலுக்கிய குழந்தை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்?!
இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி, இன்று முதல் அக்.6-ஆம் தேதி வரை மெரீனா கடற்கரை, விமான நிலைய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து, ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டிருந்தார்.
இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப் படையின் 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.
விமான சாகசத்துக்கான ஒத்திகைகள் இன்று தொடங்கிய நிலையில், அக்.5-ஆம் தேதி வரை மெரீனா கடற்கரையில் நடைபெறவுள்ளது.