விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டு களித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) – கேமரூன் நோரி (இங்கிலாந்து) விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றுள்ளார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி