வியத்நாம்: ஒட்டுமொத்த மலைக்கிராமமும் வெள்ளத்தில் மூழ்கியது! உயிரிழப்பு 155-ஆக உயா்வு

தெற்காசிய நாடான வியத்நாமின் வடக்குப் பகுதியில் யாகி புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வியத்நாமில் யாகி புயல் கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்ததைத் தொடா்ந்து கனமழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவை ஏற்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், வடக்கு வியத்நாமில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஒட்டுமொத்த கிராமமும் நீரில் மூழ்கியுள்ளது. அதில் அப்பகுதியில் வசித்து வந்த 30 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, வியத்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 155-ஆக உயர்ந்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு வியத்நாம் சந்தித்துள்ள மிக மோசமான இந்தப் புயலின் விளைவாக இன்னும் 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனா்.

வெள்ளத்தில் மூழ்கிய ‘லாங் நு’ மலைக்கிராமம்

கனமழை எதிரொலியாக, சீன எல்லையையொட்டியுள்ள ‘லாவ் கேய்’ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை(செப்.10) மலைப்பகுதியிலிருந்து பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளம், ‘லாங் நு’ மலைக்கிராமத்தை மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில், அங்கு வசித்து வந்த சுமார் 35 குடும்பங்களின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த தகவல் சரியாகத் தெரியவில்லை என்று அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த அசம்பாவிதத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான 65 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வியத்நாம் புயல்: 127-ஆக அதிகரித்த உயிரிழப்பு

மேலும், யாகி புயலால் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 141 பேர் மாயமானதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் மலையேற்ற சுற்றுலாத் தளமான ‘சாப்பா’, கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ‘லாவ் கேய்’ மாகாணத்தில் உள்ள சாப்பாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் உள்ளிட்ட சாகசப் பயணங்களில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘லாங் நு’ மலைக்கிராமத்தில் நட்டைபெறும் மீட்புப்பணி

காவோ பாங்க் மாகாணத்தில் பூ தோ மாகாணத்தில் ரெட் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஸ்டீல் பாலம் திங்கள்கிழமை காலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில், அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த 10 கார்கள், லாரிகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

வியத்நாம் வெள்ளம்: 2 துண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்