விராட் கோலி – ஸ்டீவ் ஸ்மித் இடையேயான போட்டியைக் காண ஆவலாக உள்ளேன்: மேக்ஸ்வெல்

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையேயான போட்டியைக் காண ஆவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கைவிடப்பட்ட நியூசி. – ஆப்கன் டெஸ்ட் தொடர்; பயிற்சியாளர்கள் ஏமாற்றம்!

விராட் கோலி – ஸ்டீவ் ஸ்மித்

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நவீன கால கிரிக்கெட் வீரர்களில் சிறந்தவர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையேயான போட்டியைக் காண ஆவலாக இருப்பதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங் சூப்பர் ஸ்டார்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையே பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, கடுமையான போட்டி இருக்கும் என நினைக்கிறேன். பார்டர் – கவாஸ்கர் தொடரில் அவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல முயற்சி செய்வார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப் போகிறார்கள். அவர்கள் இருவரும் அதிக ரன்கள் குவிக்கத் தவறினாலும், அவர்களுக்கு இடையேயான போட்டியைக் காண மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்