‘விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ – முத்தரசன் வலியுறுத்தல்

விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து நிறைவேற்றிதர வேண்டுகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் ரூ.50,000/- வரை உயர்த்துதல், உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் விரிவுரையாளர்கள் இனி வேறு பணிகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டுகிறோம்."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா