விருந்தினர்களை கவர்ந்த அனந்த் அம்பானியின் செல்லப்பிராணி.. வீடியோ வைரல்

விருந்தினர்களை கவர்ந்த அனந்த் அம்பானியின் செல்லப்பிராணி… வீடியோ வைரல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஆடம்பரமான நிகழ்வில் நேற்று மும்பையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் அனந்த் அம்பானியின் செல்லப்பிராணி இடம்பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அனந்த் அம்பானியின் கோல்டன் ரிட்ரீவர் நாய்க்கு சிவப்பு நிறத்தில் ஷேர்வானி அணியப்பட்டிருந்தது. இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே வைரலாகி ஆன்லைனில் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது.

விளம்பரம்விளம்பரம்

அனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இவர்களது திருமண கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் நேற்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியது.

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதியான் இன்று சுப ஆசீர்வாத நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள் அனைவரும் மும்பையில் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்-ன் திருமணத்திற்காக நேற்று குவிந்தனர். இந்நிலையில் உலகமே வியக்கும் வகையில் அனந்த்-ராதிகாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இந்திய பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

விளம்பரம்

Also Read |
‘மாமேரு விழா’… கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட் ஆடை… சில பின்னணி தகவல்கள்!

அனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறுகின்றன. முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெற்றது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் ஜனவரி 2023-ல் மும்பையில் உள்ள இல்லமான ஆன்டிலியாவில் பாரம்பரிய விழாவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். ஆடம்பரமான சங்கீத் மற்றும் ஹல்டி விழாவிற்குப் பிறகு, இந்த ஜோடிக்கு நேற்று ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி