விரைவிலேயே வீட்டிற்கு சென்றது ஏமாற்றம்! உலகக் கோப்பை தோல்வி குறித்து கம்மின்ஸ்!

விரைவிலேயே வீட்டிற்கு சென்றது ஏமாற்றம்! உலகக் கோப்பை தோல்வி குறித்து கம்மின்ஸ்! டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பாட் கம்மின்ஸின் பதிவு. பாட் கம்மின்ஸ்படங்கள்: இன்ஸ்டா / பாட் கம்மின்ஸ்

சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கன் அரையிறுதிக்கு முன்னேற, ஆஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேறியது.

பாட் கம்மின்ஸ் டி20 உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை அதாவது அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

ஒருநாள் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. டி20க்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக செயல்பட்டார்.

31 வயதாகும் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு கூட்டிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் 6 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இப்படியான பலம்வாய்ந்த அணியை ஆப்கன் வென்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்திய ரசிகர்களும் ஆஸி. தோல்வியை பெரிதாகக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “நாங்கள் எதிர்பார்த்த மாதிரி போட்டியை முடிக்கமுடியவில்லை. விரைவிலேயே வீட்டுக்கு செல்வது ஏமாற்றமாக இருந்தாலும் இந்த அணிக்காக இந்த வீரர்களுடன் விளையாடியதை நேசிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு