விரைவில் புதிய இல்லத்திற்கு மாறுகிறார் கேஜரிவால்: ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து காலி செய்ய உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கூறுகையில்,

முதல்வர் இல்லத்தை விரைவில் காலி செய்ய உள்ளதாகவும், அதற்கான முயற்சிகளில் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜரிவால் தனது சட்டமன்றத் தொகுதியான புது தில்லிக்கு அருகிலுள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். ஏனெனில் அங்குள்ள மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இதையும் படிக்க: நோபல் கனவுடன் அமைதி வியாபாரிகள்! யாரைச் சொல்கிறார் ஸெலன்ஸ்கி?

தீவிர தேடலில் ஆம் ஆத்மி கட்சி

புதிய வீட்டைத் தேடுவதற்கான தீவிர முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், இதையடுத்து நவராத்திரி காலத்தில் அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு காலி செய்ய உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆத் ஆத்மி எம்.எல்.ஏ.ககள், கவுன்சிலர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் சமூக பொருளாதார அரசியல் பின்னணியைப் பொருட்படுத்தாமல் கேஜரிவாலுக்கு தங்குமிடத்தை வழங்க முன்வந்துள்ளனர் என்று கட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?

மத்திய அரசுக்கு கோரிக்கை

தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் வகையில் கேஜரிவாலுக்கு அதிகாரப்பூர்வ வீட்டை ஒதுக்க மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கேஜரிவால் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் 155 நாள்கள் சிறைக்குப் பின்னர் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதன்பின்னர் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ronit Roy Refuses To Work With Vashu Bhagnani After ‘Painful’ Experience On BMCM, Claims Payment Was ‘Very Delayed’

IIT Delhi Introduces ‘Research Communications Award’ To Boost PhD Scholars’ Communication Skills; Winners Get Rs. 25000

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!