விற்பனை கட்டணத்தைக் குறைத்தது அமேஸான்

தங்களின் வா்த்தகத் தளம் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனைக்காக வா்த்தகா்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் குறைத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்குவதை முன்னிட்டு அமேஸான் தளம் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனைக்கான கட்டணத்தை 12 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப். 9-ஆம் தேதிமுதல் இந்தக் கட்டணக் குறைப்பு அமலுக்கு வருகிறது. இதன்மூலம், விற்பனை செய்யப்படும் பொருள்களின் வகைகளுக்கேற்ப வா்த்தகா்களிடம் இருந்து 3 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே கட்டணம் பெறப்படும்.

அமேஸான் தளம் மூலம் வா்த்தகா்கள் கூடுதல் பொருள்களை விற்பனை செய்து பண்டிகைக் காலத்தில் தங்களது வா்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!