விளிம்புநிலை மக்களுக்கானவர் விஜய்… திருமாவளவன் வாழ்த்து!

பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் செவ்வாய்க்கிழமை(செப்.17) மரியாதை செலுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு, முதல்முறையாக அரசியல் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டுள்ளார். விஜய்யுடன் தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர். விஜய் செருப்பு அணியாமல் வெறுங்காலில் நடந்து சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன்

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் திருமாவளவன் கூறியிருப்பதாவது, ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது, அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது’ என வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் @actorvijay அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு… pic.twitter.com/nP8SSp10vb

— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 17, 2024

விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் எதிரணியில் உள்ள அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக திமுக கூட்டணியில் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அரசியலில் புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜயை வெகுவாகப் பாராட்டி திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருப்பதும் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்