விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடி – அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடி… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடி மதிப்பில் ஏழு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் வேளாண் திட்டத்திற்காக மட்டும் ரூ. 2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த ரூ. 3,979 கோடியும், வேளாண் துறை சார் கல்வி மற்றும் மேலாண்மைக்காக ரூ. 2,291 கோடியும் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
முதன்முறை புருனே பயணம்… பிரதமர் மோடிக்கு கிடைக்கப்போகும் பெருமை இதுதான்!

நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்திக்கு ரூ, 1,702 கோடியும், தோட்டக்கலை வளர்ச்சிக்கு ரூ. 1,129 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல், இயற்கை வள மேலாண்மை என மொத்தம் 7 திட்டங்களுக்கு சுமார் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்… திரளான பக்தர்கள் தரிசனம்.!
மேலும் செய்திகள்…

தொடர்ந்து ரூ.18,000 கோடி செலவில் புதிய ரயில் பாதை திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்பாதை திட்டம் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே வழித்தடம் மேலும் 309 கிலோ மீட்டர் தூரம் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் இந்திய விமானப்படைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விமான எஞ்சின்களை வாங்குவதற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cabinet
,
farmers
,
PM Narendra Modi

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!