விவாகரத்து, மயோசிடிஸ், ஆன்மிகம்…! 6 புதிய திறமைகள்..! அனுபவம் பகிர்ந்த சமந்தா!

விவாகரத்து, மயோசிடிஸ், ஆன்மிகம்…! 6 புதிய திறமைகள்..! அனுபவம் பகிர்ந்த சமந்தா! நடிகை சமந்தா தனக்கு நேர்ந்த பிரச்னைகளில் இருந்து புதியதாக பலதும் கற்றுகொண்டதாகக் கூறியுள்ளார்.சமந்தா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார்.

அதற்காக, குதிரையேற்றப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகளை பயின்று உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். சமந்தா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளனர். அதன் முதல் படமாக, ‘மா இண்டி பங்காரம்’ உருவாகிறது. அதில் ஆக்சன் நாயகியாகவே நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் சமந்தா கூறியதாவது:

கடந்த 3 வருடங்களாக எனக்கு பல பிரச்னைகள் வந்தன. ஆனால் இந்தப் பிரச்னைகளால் எனக்கு பல நன்மைகளும் நடந்துள்ளன. கஷ்டங்கள் வரும்போது நாம் புதியதாக கற்றுக்கொள்கிறோம். புதியதாக 6 திறமைகளைக் கற்றுக் கொண்டேன். தற்காப்பு கலைகள், அம்பு எய்தல், கத்தி சண்டை, குதிரை ஏற்றம், பாலட் என பலதை கற்றுக்கொண்டேன். புதியதாக கற்றுக்கொள்வது எப்போதும் பிடித்தமானது.

ஆன்மிகம்தான் எனக்கு புதிய சக்தியை கொடுத்தது. ஆன்மிகம் எனது வாழ்க்கையில் ஒருங்கிணைத்துவிட்டது. அது எனது பணியில் நல்ல மாற்றங்களைக் கொடுத்தது. தற்போதைய சோதனையான கால கட்டத்தில் பல வலிகள், நோய்கள் இருக்கும்பட்சத்தில் எதைவிடவும் ஆன்மிகம் மிகவும் தேவையானதாக இருக்கிறது என்றார்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்