வீட்டை அகற்ற எதிர்ப்பு: கும்மிடிப்பூண்டியில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீடு அரசு நிலத்தில் இருப்பதாக கூறி, அதனை இடித்து அகற்றுவதற்காக கடந்த 4-ம் தேதி அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார் தீக்குளித்தார். அப்போது 85 சதவீதம் தீக்காயமடைந்த அவருக்கு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி