வீரனின் விழிகள்

வீரனின் விழிகள்

வீரனின் விழிகள் – ஹரீஷ் பிரபாகரன்; பாகம் 1-பக்.218-ரூ.300; பாகம் 2-பக்.180- ரூ.200; எம்.ஜே. பப்ளிகேஷன் ஹவுஸ், திருச்சி-1; 99434 28994.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸýடன் தொடர்புடைய நிகழ்வுகள், வரலாற்று சந்திப்புகள், ஆங்கிலேய அடக்கு முறைகள், சுதந்திரப் போராட்ட எழுச்சி, வீரர்கள் சந்தித்த இன்னல்களையும் முழு நீள நாவலாக படைத்துள்ளார் ஆசிரியர்.

'தமிழகத்தில் இருந்தே முதல் சுதந்திரப் போராட்டத் தீ அணுகுண்டாய் வெடித்தது, மாமன்னர் காத்தப்ப பூலித்தேவரின் வரலாற்று நிகழ்வு, ஆங்கிலேயர்களால் 1767-ஆம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவரின் கடைசி ஆசையைக் கேட்டு அவரது விருப்பப்படி சங்கரன்கோவில் சங்கர நாராயணர், கோமதி அம்மன் சந்நிதியில் வழிபட்டபோது, ஆங்கிலேய காவலர்கள் கண்முன்னரே அவர் மாயமாகி இறைவனோடு ஐக்கியமானது ..' போன்றவை முதல் பாகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம் முழுக்க, நேதாஜியே நிரம்பியிருக்கிறார். அவருடைய பள்ளிப்படிப்பு, இளமைக்காலம், ஐசிஎஸ் படிப்பில் தேர்ச்சியும் தேசத்துக்காக அப்பட்டத்தை தூக்கி எறிந்தது, மகாத்மா காந்தியை சந்தித்தது, முதல் சந்திப்பே நேதாஜிக்கு ஏமாற்றமாய் அமைந்தது, குருநாதர் சித்தரஞ்சன் தாஸýடனான சந்திப்பு, கொல்கத்தா சிறைவாசம், பார்வர்டு பத்திரிகை முடக்கப்பட்டது, 1939-இல் நேதாஜி சென்னை வந்தது, தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி தொடக்கம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தமிழக தலைவராக பதவி ஏற்றது,

முசோலினியுடனான சந்திப்பு, நேதாஜி நடத்திய ஆவேசமான உரை, உலகப் போரின்போது ஹிட்லருடனான சந்திப்பு, ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கி கப்பலில் ஜப்பான் சென்றது, இந்திய தேசிய ராணுவக் கட்டமைப்பு என வரலாற்று நிகழ்வுகள், விமான விபத்தில் நேதாஜி சிக்கியது உள்ளிட்ட தகவல்கள் நிரம்பியுள்ளன.

நேதாஜியை விரிவாக அலசும் நூல் இது.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்