வீர தீர சூரன் படத்தில் 10-15 காட்சிகள் மட்டுமே..! ரகசியம் உடைத்த இயக்குநர்!

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன்.

இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு கலைத்தாயின் இளைய மகன் என இயக்குநர் அருண் குமாரை எஸ். ஜே. சூர்யா பாராட்டியிருந்தார்.

இயக்குநரான ஜோதிகாவின் மகள் தியா..! விருது வென்ற புகைப்படம்!

இந்நிலையில் இயக்குநர் அருண் குமார் கூறியதாவது:

முதலில் வீர தீர சூரன் 2 படம்தான் வெளியாகிறது. படம் நேரடியாக சண்டையில் தொடங்குகிறது. அதற்கான காரணம் முதல் பாகத்தில் இருக்கிறது. அந்தப் படம் பின்னர் வெளியாகும்.

இந்தப் படத்தில் 60- 62 காட்சிகள் எதுவும் இல்லை. வெறும் 10-15 காட்சிகள்தான் இருக்கின்றன. இதை இப்படி எடுக்க வேண்டுமென நினைத்து செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு காட்சியும் 5-7 நிமிட நீளமான காட்சிகளாக இருக்கும்.

விக்ரம், துஷாரா அல்லாத எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் இருவரும் படத்தில் புதியதாக இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை நடிக்காத படமென கூறுகிறார்கள். சிறந்த படப்பிடிப்பாக இந்தப்படம் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

சர்ச்சையான ஹைதர் படம் வெளியாகி பத்தாண்டுகள்… நெகிழ்ச்சியில் தபு!

சட்டை அழுக்குடன் இருந்தாலும் விக்ரம் சார் எதுவும் சொல்வதில்லை. குளோசப் காட்சிகள் படத்தில் இல்லை. அவரும் எதையும் கேட்கவில்லை. இவ்வளவு நம்பிக்கை வைப்பது சற்று கூடுதல் பொறுப்பை தருவதுபோலிருந்தது. அதேசமயம் அது விக்ரமின் தன்னம்பிக்கையை குறிக்கிறது. முதுகுக்கு பின்புறம் காமிரா வைத்தாலும் நடிக்க தயாராகாவிருக்கிறார் என்றார்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை