வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரத்து!

புதுதில்லி: வெங்காய ஏற்றுமதிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை வரம்பை மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்தது. இதனால் விவசாயிகள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக மத்திய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை மத்திய அரசு இன்று ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் தனது அறிவிக்கையில் இது குறித்து தெரிவித்துள்ள நிலையில், இன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து