வெப்ப அலையிலிருந்து தப்பிக்க இதுதான் வழி.. திகா பீச்சில் கூடும் மக்கள்

வெப்ப அலையிலிருந்து தப்பிக்க இதுதான் வழி.. திகா பீச்சில் கூடும் மக்கள்…

வெப்ப அலையிலிருந்து தப்பிக்க இதுதான் வழி.. திகா பீச்சில் கூடும் மக்கள்…

மேற்கு வங்க மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா தளமாகவும் மாவட்டத்தின் பிரபலமான நகரமாகவும் திகா திகழ்கிறது. வங்காளிகளின் விருப்பத்திற்குரிய இடங்களின் பட்டியலில் முதல் இடமாக திகா உள்ளது.

மீண்டும் வெப்ப அலை வீசத் துவங்கி இருக்கும் நிலையில், சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்கப் பலரும் திகா கடற்கரைக்குச் செல்கின்றனர். இதனால் வார இறுதி நாட்களில் திகா கடற்கரை முழுதுமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதைக் கருத்தில் கொண்டு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்கிறது.

விளம்பரம்

மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் மாவட்டத்தின் பிரபலமான நகரமாகவும் திகா திகழ்கிறது. வங்காளிகளின் விருப்பத்திற்குரிய இடங்களின் பட்டியலில் முதல் இடமாக திகா உள்ளது. அதனால் தான் அனைத்துக் காலங்களிலும் திகா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையும் படிங்க: Bakrid: ஆடு விலை ரூ.70 ஆயிரமா..? கோங்கு ரக ஆடு வாங்க மேலப்பாளையத்தில் கடும் போட்டி…

வங்காளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடுமையான வெப்பத்துடன் சேர்த்து காற்றில் அதிக நீராவியும் இருப்பதால், அது மனிதர்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரம்

இந்த மோசமான வெப்பத் தாக்கத்திலிருந்து விடுபடவே, மக்கள் கூட்டம் கூட்டமாக திகா கடற்கரைக்குச் செல்கின்றனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், திகாவின் வெப்பநிலை சற்று குறைவாகவே உள்ளது. இதுவே திகா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

ஏற்கனவே ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது திகா கடற்கரை. ஆனல் கடந்த 9ஆம் தேதி கூடிய கூட்டம் சற்று கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. திகா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த திகா கடற்கரை முழுவதும் கூடுதலாகக் குடிமைப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Local News
,
Summer Vacation

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்