வெற்றி சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்த கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி தொகுதியில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கனிமொழி 2-வது முறையாக வாகை சூடினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி, அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. அனைத்து சுற்றுகள் முடிவில் கனிமொழி 5,40,729 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கனிமொழி 2-வது முறையாக வாகை சூடினார்.

வெற்றி பெற்ற கனிமொழிக்கு தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார். கனிமொழி எம்.பி.யை தவிர அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில், கனிமொழி கருணாநிதி எம்.பி. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார். மேலும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை சந்தித்து வெற்றி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வெற்றி சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்த கனிமொழி கருணாநிதி
சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
மேலும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்… pic.twitter.com/bYJ9T9Z8yx

— Thanthi TV (@ThanthiTV) June 5, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!