வெற்றி பெற்றால் குழந்தை தருகிறேன்: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் அளித்த ஆதரவை எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு, தான் வாக்களிக்கவிருப்பதாக பிரபல பாப் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டெய்லர் ஸ்விஃப்டின் ஆதரவை விமர்சிக்கும் வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் “நீங்கள் வெற்றி பெற்றால், நான் உங்களுக்கு ஒரு குழந்தையைத் தருவேன். மேலும், உங்கள் பூனைகளையும் எப்போதும் பாதுகாப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Fine Taylor … you win … I will give you a child and guard your cats with my life

— Elon Musk (@elonmusk) September 11, 2024

டெய்லர் ஸ்விஃப்ட் குறித்த எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்புகள் கூறி வருகின்றனர்.

டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குதான் நான் வாக்களிக்கப் போகிறேன். ஏனென்றால், அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என்று நினைக்கிறேன்.

நாம் அமைதியால் வழிநடத்தப்பட்டால், இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Taylor Swift (@taylorswift)

எலான் மஸ்க் மேலும் ஒரு பதிவில், “நல்ல வார்த்தைகளைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அதனை நடைமுறைப்படுத்துவதில் டிரம்ப் மிகச் சிறந்த வேலையைச் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கமலா ஹாரிஸால் பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்றால், அவர் ஏன் செய்யவில்லை?

பைடன் அரிதாகவே வேலைக்கு வருகிறார். கேள்வி என்னவென்றால், தற்போதைய நிலைமையே இன்னும் 4 ஆண்டுகளுக்கு தொடர விரும்புகிறீர்களா அல்லது மாற்றத்தை விரும்புகிறீர்களா?’’ என்று கூறியுள்ளார்.

While I don’t think the debate hosts were fair to @realDonaldTrump, @KamalaHarris exceeded most people’s expectations tonight.
That said, when it comes to getting things done, not just saying nice-sounding words, I strongly believe that Trump will do a far better job.
After…

— Elon Musk (@elonmusk) September 11, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான துணையதிபர் கமலா ஹாரிஸை எதிர்த்து, குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக, டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதியில் நடத்தப்படவுள்ளது.

எந்த உதவியும் வழங்கவில்லை; அனுமதியின்றி படம் எடுத்தார்கள்! வினேஷ் போகத்

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!