வெற்றி வசந்த் – வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி தொடர் நாயகி வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று(அக். 13) நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என முக்கியமானவர்கள் பங்கேற்றனர்.

வெற்றி வசந்த் – வைஷ்ணவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:மகாநதி தொடர் நடிகைக்கு குவியும் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலத் தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடரில் முத்து பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

அதேபோல், ராஜா ராணி 2ஆம் பாகத்தில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை வைஷ்ணவி. இவர், தற்போது பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Vaishnavi sundar (@vaishusundarofficial)

இதனிடையே, தன்னுடைய காதலி வைஷ்ணவியை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகர் வெற்றி வசந்த் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போது, இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் சஞ்சீவ் – ஆல்யா மானசா, சித்து – ஸ்ரேயா, ஆர்யன் – ஸ்ருதிகா, சுரேந்தர் – நிவேதிதா, ஷாபானா – ஆர்யன் வரிசையில் வெற்றி வசந்த் – வைஷ்ணவியும் இணைந்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by R Sabarinathan (@actorsabari)

வெற்றி வசந்த் – வைஷ்ணவியின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது