வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதி

புது தில்லி: குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டன. இதைத் தொடா்ந்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்திருக்கக் காரணமான கிளேட்-1 வகை வைரஸ் பாதிப்பு இது இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சமடைய தேவை இல்லை.

அவரது உடல்நிலை தற்போது வரை சீராகவே இருந்து வருகிறது. தடிப்புகள் போன்ற தீவிரமான அறிகுறிகள் அவரது உடலில் இதுவரை தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை முதன்முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வனப் பகுதிகளில் உள்ள குரங்குகளிடம் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்லாமல், வேறு கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

யில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி 18 முதல் 44 வயதுடைய ஆண்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் குரங்கு அம்மை பரவலுக்கு முக்கிய காரணியாக பாலியல் தொடா்பு உள்ளது. எனவே, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு நோய்ப் பரவலை தடுக்க விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வா சந்திரா எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், பரவலைத் தடுக்கவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவா்களை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான மருத்துவப் பணியாளா்கள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

குரங்கு அம்மை பாதிப்பு, பரவல், பரிசோதனை மற்றும் உறுதிசெய்வது குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் (ஐடிஎஸ்பி) மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார பணியாளா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அண்மை

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்