வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்: அரியணை போட்டியில் முந்துவது யார்..?

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி (I.N.D.I.A.) 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்த பெரும்பான்மையை பா.ஜனதா கூட்டணி பெறும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:-

தமிழ்நாடு:-

இந்தியா டுடே:

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 33 முதல் 37 தொகுதிகள் வரையும், இரண்டு முதல் நான்கு தொகுதி வரை பா.ஜனதாவுக்கும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்என் – நியூஸ்18:

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு 36 முதல் 39 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ்:

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 35 முதல் 38 தொகுதிகளும், பா.ஜனதா கூட்டணிக்கு 0 முதல் 3 தொகுதிகளும், அதிமுகவுக்கு 0 முதல் 1 தொகுதியும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்கி பாத்

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், பா.ஜனதா 0 முதல் 5 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், அதிமுக ஒரு இடத்தைக்கூட பிடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு

ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ்

இந்திய அளவில் பா.ஜனதா கூட்டணிக்கு 353 முதல் 368 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 133 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 43 முதல் 48 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என்.

பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 355 முதல் 370 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், இந்தியா கூட்டணி 125 முதல் 140 இடங்களைப் பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்கி பாத்

பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 377 இடங்கள் (15 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) என்றும், இந்தியா கூட்டணி 151 இடங்களை (10 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 15 இடங்கள் (5 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) வரை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பா.ஜனதா 327 இடங்களையும் காங்கிரஸ் 52 இடங்களையும் பிடிக்கக்கூடும் என்றும் கூறுகிறது.

டைம்ஸ் நவ்

தேசிய அளவில் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 358 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 152 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 33 தொகுதிகளும் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா:-

ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ்

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 21 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 7 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே

பா.ஜனதா கூட்டணிக்கு 23 முதல் 25 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும், இந்தியா கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கேரளா:-

இந்தியா டுடே

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 17 முதல் 18 தொகுதிகளும், பா.ஜனதா கூட்டணிக்கு 2 முதல் 3 தொகுதிகளும், இடது ஜனநாயக முன்னணிக்கு 0 முதல் 1 இடமும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏபிபி நியூஸ் – சிவோட்டர்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 17 முதல் 19 இடங்கள் கிடைக்கும் எனவும், பா.ஜனதா கூட்டணிக்கு 1 முதல் 3 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்:

ஆந்திர மாநிலம்:

2019 நாடாளுமன்ற தேர்தல்:-

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA), சுமார் 100 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது.

கருத்துக் கணிப்புகள் சரி என்று நிரூபிக்கும் வகையிலேயே உண்மையான தேர்தல் முடிவுகளும் இருந்தது. அதன்படி பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்