வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட குட்டி யானை- அடுத்து நடந்த நெகிழ்ச்சி

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை… அடுத்து நடந்த நெகிழ்ச்சி… இளைஞருக்கு குவியும் பாராட்டு!

பருவமழையால் நாடு முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது. இருப்பினும், அசாமில், பருவமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. காடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல விலங்குகள் வெள்ளத்தி சிக்கியுள்ளன. இந்நிலையில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இருந்து குட்டி யானையை காப்பாற்ற இறங்கிய இளைஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த வீடியோவை brut.india இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது, அந்த வீடியோவில் குட்டி யானை ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியிருப்பதைக் காணலாம். சிராங் மாவட்டத்தில் உள்ள ஆற்றின் வெள்ளத்தில் குட்டி யானை தவறி விழுந்தது. இந்த குட்டி யானைக்கு வயது ஆறு வாரங்களே ஆகிறது. ஐ போவாலி பாலத்தின் அடியில் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த குட்டி யானையை வனக் காவலர்கள் மீட்டனர்.

விளம்பரம்

இளம் வனக் காவலர் ஒருவர் கயிற்றுடன் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இறங்கிக் கொண்டிருந்தார். பின்னர் குட்டி யானையை கயிற்றில் கட்டி மேலே கொண்டு வந்தார். சிராங் வனப் பிரிவுக்கு உட்பட்ட ராணிகட்டா மலைத் தொடருக்கு கொண்டு வரப்பட்ட குட்டி யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அந்த யானைக்கு கடுமையான காயங்கள் இல்லை என்றும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வனக் காவலர்கள் இந்த பெண் யானையைப் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.

குட்டி யானையின் தாயைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. தற்போது குட்டி யானைக்கு வனத்துறை கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த யானை புனர்வாழ்விற்காக மனாஸ் தேசிய பூங்காவிற்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளனர்.

விளம்பரம்

குட்டி யானையை மீட்ட நிஜ வாழ்க்கை ஹீரோக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து யூசேர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு யூசர் கூறியதாவது, மனிதநேயம் உயிருடன் இருக்கிறது, இந்த துணிச்சலான மனிதனுக்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர் கூறியதாவது, எல்லா ஹீரோக்களும் கேப் அணிவதில்லை என்றார். இன்னொரு யூசர் கூறியதாவது, நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்ந்து 19 மாவட்டங்களில் நீடித்து வருவதால், 6 லட்சம் பேர் சிக்கித் தவித்து வருகின்றனர், மேலும், 968 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அரசு ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. அகதிகளுக்கான முகாம்களை அரசாங்கம் திறந்துள்ளது மற்றும் மொத்தம் 17,661 பேர் அந்த முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Assam
,
Elephant
,
Heavy rain

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்