வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி,

குஜராத், மணிப்பூர், திரிபுரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தது. இதையடுத்து, அந்த மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகளும் ஏற்பட்டது.

இதனிடையே, கனமழை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பாதிப்புக்கு ஏற்பட மத்திய அரசு நிவாரண நிதி வழக்கம். அந்த வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, குஜராத்திற்கு 600 கோடி ரூபாய், மணிப்பூருக்கு 50 கோடி ரூபாய், திரிபுராவுக்கு 25 கோடி ரூபாய் என மொத்தம் 675 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பீகார், மேற்கு வங்காளத்திற்கு வெள்ளநிவாரண நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals