வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா ஆட்டம்: மழையால் தற்காலிகமாக நிறுத்தம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்று வரும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி