வேட்டையனே இறுதி… உதயம் திரையரங்கம் மூடல்?

சென்னையின் பிரபல திரையரங்கமான உதயம் தியேட்டர் இடிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு திரைகளுடன் உதயம் திரையரங்கம் துவங்கப்பட்டது. ஒவ்வொரு திரைகளிலும் 750 பேர் வரை அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

பல முன்னணி நடிகர்களின் படங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு திரையிடப்பட்டு வருகின்றன. ரஜினி, கமல் முதல் இன்றைய நட்சத்திர நடிகர்கள் வரை என பலருக்கும் சென்னையின் நினைவுகளில் ஒன்றாகவே இந்தத் திரையரங்கம் நீடிக்கிறது.

இதையும் படிக்க: கதாநாயகனாகும் மிஷ்கின்?

இந்த நிலையில், வேட்டையன் படத்துடன் உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மல்டிபிளக்ஸ் வளர்ச்சிகளுக்குப் பிறகு பழைய திரையரங்கங்கள் அதன் பொலிவை இழந்து வருகின்றன. இதனால், உதயம் திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இருப்பதாகத் தகவல்.

இதையும் படிக்க: வேட்டையன் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து!

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக