வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த அக்.10 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதையும் படிக்க: தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்புப் படங்கள்!
மேலும் இப்படத்தில் பிரதானப் பாத்திரங்களில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், நடிகை மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் வரும் நவ. 8 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.