வேட்டையன்: மழையால் வெறிச்சோடிய திரையரங்குகள்!

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் வேட்டையன் படத்தின் திரையரங்க வணிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது.

முதல் நாளில் இந்தியளவில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஜெயிலரின் முதல் நாள் வசூலான ரூ.48 கோடியை முறியடிக்கவில்லை. இருந்தாலும், நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கங்குவா: பிறமொழிகளில் சூர்யாவின் ஏஐ குரல்!

இந்த நிலையில், மதுரை, கோவை உள்பட சில மாவட்டங்களில் நேற்று (அக்.13) கனமழை பெய்ததால் அங்குள்ள திரையரங்குகளுக்குச் செல்வதை ரசிகர்கள் தவிர்த்துள்ளனர்.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல திரைகளில் வேட்டையன் திரையிடப்பட்டும் டிக்கெட் முன்பதிவுகள் வெறிச்சோடியபடி இருக்கின்றன.

மழையால், வேட்டையன் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பது தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது