வேறு நபருக்கு ரயில் டிக்கெட் புக் செய்து கொடுத்தால் சிறை தண்டனையா?

வேறு நபருக்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொடுத்தால் சிறை தண்டனையா? – உண்மை என்ன? – IRCTC கொடுத்த விளக்கம்

கோப்புப்படம்

ஒருவரின் IRCTC ஐடியில் இருந்து மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொடுத்தால், சிறை தண்டனை கிடைக்கும் என்று வெளியான தகவல் குறித்த உண்மை தெரியவந்துள்ளது.

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC இணையதளத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலரும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் முன்பதிவு செய்து கொடுக்கின்றனர். ஆனால், இனிமேல், தங்களது குடும்ப உறுப்பினர்களை தாண்டி, வேறு யாருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால், ரூ.10,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று அண்மையில் தகவல் வெளியானது.

விளம்பரம்

ஐஆர்சிடிசி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டதாக தகவல் பரவிய நிலையில், அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க:
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை – மாநில அரசு அதிரடி!

இதைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாமா? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ஆம்! என்று ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது. குறிப்பாக, விமானங்களைப் போலவே, நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், பயணிக்கும்போது செல்லுபடியாகும் புகைப்பட அடையாள சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

The news in circulation on social media about restriction in booking of e-tickets due to different surname is false and misleading. pic.twitter.com/xu3Q7uEWbX

— IRCTC (@IRCTCofficial) June 25, 2024

விளம்பரம்

ஆனால், உறவினர்கள், நண்பர்களைத் தாண்டி, அங்கீகரிக்கப்படாத முகவரைப் போல ரயில் டிக்கெட்டுகளை பிறருக்கு முன்பதிவு செய்து கொடுத்து, பணம் வாங்கினால் அதற்குதான் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Fake News
,
IRCTC
,
Train Ticket Reservation

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்