வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் – உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

வேலைவாய்ப்பை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்!

இந்திய ஒன்றியத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக் கொண்டிருக்கின்றன.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் என்றும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்!
இந்திய ஒன்றியத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர்… pic.twitter.com/uV21TeXX6q

— Udhay (@Udhaystalin) September 30, 2024

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!