வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவின் பேரில் 1,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,050 சிறப்பு பஸ்கள் வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வரையில் இயக்கப்பட உள்ளது.

www.tnstc.inமற்றும் tnstc official app செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!