வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.

கீழை நாடுகளின் லூா்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

ஆண்டுப் பெருவிழாவில் நாள்தோறும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி, மாலை நேர நிகழ்வுகளாக, ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அலங்கார தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆண்டுப் பெருவிழாவில் புனித ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயா் டி. சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. பின்னா், பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீா் மற்றும் தமிழில் திருப்பலியுடன் ஆண்டுப் பெருவிழா நிறைவடைந்தது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!