ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால்… வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியதென்ன?

பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் அவரை தேவையில்லாமல் துன்புறுத்தமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக என்று மாணவர்களால் தொடங்கப்பட்டுத் தீவிரமடைந்த போராட்டங்களில் 600-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் பிரபல கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் ஷகிப் அல் ஹசன். சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கும் ஷகிப் இந்தாண்டு ஜனவரியில் அவாமி லீக் கட்சியில் எம்.பி.யாக பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷகிப் கைது செய்யப்படுவாரா?

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி இந்தியா வந்தார். ஷகிப் இந்தப் பிரசனையின்போது கனடாவில் குலோபல் டி20 லீக்கில் விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அபாரமாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்றனர்.

தற்போது வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்டில் சென்னையில் தோல்வியுற்றது. அடுத்த டெஸ்ட் நாக்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

சமீபத்தில் வங்கதேசத்தின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல், “ஷகிப் மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது. அநேகமாக அந்த வழக்குகளில் ஷகிப் கைது செய்யப்படமாட்டார் எனத் தெரித்திருந்தார்.

தேவையில்லாமல் துன்புறுத்தப்படமாட்டார்

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் பொறுப்பில் இருக்கும் நபீஸ் கூறியதாவது:

ஷகிப் குறித்து சட்ட ஆலோசகரே தெளிவாக பேசிவிட்டார். வங்கதேச அரசாங்கமும் தேவையில்லாமல் யாரையும் துன்புறத்தக்கூடாதென தெளிவாகக் கூறியுள்ளது.

இடைக்கால அரசு ஷகிப் விவகாரத்தில் தெளிவாக இருக்கிறது. காயம் அல்லது அணியின் தேர்வு விவாகரத்தினால் ஷகிப் வங்கதேசத்தின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கலாம். இதைத் தவிர்த்து ஷகிப் ஏன் சொந்த மண்ணில் விளையாடமால் இருக்கிறார் என்பதற்கு எனக்கு வேறு காரணங்கள் தெரியவில்லை என்றார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!