ஷுப்மன் கில், ரிஷப் பந்த் சதம்: 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 376க்கு ஆட்டமிழக்க அடுத்து ஆடிய வங்கதேச அணி 149க்கு ஆல் அவுட்டனது.

இந்தியாவின் பிரதான பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டா்கள் தடுமாற, அவா்களை முற்றிலுமாக சரிக்க ஆகாஷ் தீப், முகமது சிராஜும் துணை நின்றனா். ரவீந்திர ஜடேஜாவும் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையும் படிக்க:177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!

2ஆவது இன்னிங்ஸில் இந்தியாவின் சார்பாக ஷுப்மன் கில் (119), ரிஷப் பந்த் (109) இருவரும் சதமடித்து அசத்தினார்கள். இந்தியா 287/4க்கு டிக்ளேர் அறிவித்தது.

ரிஷப் பந்த், ஷுப்மன் கில்.

வங்கதேசம் வெற்றி பெற 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வங்கதேசம் 11 ஓவர் முடிவில் 49 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பு ஏதுமின்றி அதிரடியாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் வங்கதேசம் 400க்கும் அதிகமான ரன்களை டெஸ்டில் சேஸ் செய்து வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்