ஷூவிற்குள் ஒளிந்து படம் எடுத்த பாம்பு – வைரலாகும் புகைப்படம்…

ஷூவிற்குள் ஒளிந்து படம் எடுத்த விஷப்பாம்பு – வைரலாகும் புகைப்படம்…

ஷூவிற்குள் ஒளிந்து படம் எடுத்த பாம்பு

மழைக்காலத்தில் அவசரமாக வெளியே செல்வர்களாக இருந்தால் சற்று கவனமாக இருங்கள். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், மழைக்காலத்தின் ஈரப்பதம் நிறைந்த சூழலில் விஷப் பூச்சிகள் முதல் விஷப்பாம்புகள் வரை இருக்கலாம். விஷப்பாம்புகள் அருகிலுள்ள புதர்கள், பழைய வீடுகள், குளங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் சுற்றித் திரிகின்றன. மழைக்காலங்களில் பாம்புகள் உணவு தேடி வீடுகளுக்குள் கூட நுழைகின்றன. எனவே மழைக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துகள் போதுவாக மழைக்காலங்களில் கதகதப்பான இடத்தை நோக்கியே செல்லும். அப்படி பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் விரும்பும் ஒரு இடம் தான் ஷூ. ஷூக்களை பொதுவாக சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும் என்பதை அடிக்கடி பல வீடியோக்களில் நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணம் சிறிய அல்லது பெரிய பாம்புகள் கூட சுருட்டிக்கொண்டு ஷூவிற்குள் படுத்துக் கொள்ளும் என்பதால்தான்.

விளம்பரம்

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காலணிகளை ஒருமுறை சோதித்து விட்டு, பின்னர் அணிவது பல ஆபத்தில் இருந்து நம்மை காக்க உதவும். குறிப்பாக இது மழைக்காலம் என்பதால் ஷூக்கள் போன்ற வெப்பமான இடத்தை நோக்கி பூச்சிகள் மற்றும் பாம்புகள் தஞ்சமடையும். அப்படி வரும் போது ஷூவிற்குள் ஒளிந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அஜாக்கிரதையாக ஷூக்களை அப்படியே போட்டுவிடக்கூடாது. குறைந்தது இரண்டு மூன்று முறை தலைகீழாக தட்டிவிட்டு, சுத்தம் செய்த பின்னரே போட வேண்டும்.

விளம்பரம்

இதையும் வாசிக்க:ஒரு கிளிக் போதும்…. வீட்டில் இருந்தே பட்டாவை ஈஸியா மாற்றலாம்… எப்படினு தெரிஞ்சுக்கோங்க

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி நகரத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.அந்த புகைப்படம் விஷப்பாம்பு ஒன்று ஷூவுக்குள் சுருண்டு கிடப்பதை காட்டுகிறது. ஷூவு அசைந்தவுடன் பாம்பு வெளியே வரும். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பு

இந்த மழைக்காலத்தில், வீட்டின் உள்ளே உள்ள காலணிகள் அல்லது ஹெல்மெட், பயன்படுத்தப்படாத வாகனங்கள் அல்லது துணிகள் என எந்த மூலையிலும் பாம்புகள் இருக்கலாம். எனவே, நீங்கள் திடீரென்று வெளியே சென்றால், உங்கள் காலணி அல்லது பைக் ஹெல்மெட்டைச் சரிபார்த்து, பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் அணிவது அவசியமாகும்.

விளம்பரம்

இது போன்ற சம்பவங்கள் பல நடந்திருந்தாலும், தற்போது இணைய உலகில் வைரலான இந்த புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், அதில் இருந்து ஒரு பாடம் நமக்கு கற்பிக்கப்படுகிறது. அதாவது, காலணிகள் உட்பட அனைத்தையும் எப்போதும் கவனமாக அணியுங்கள். இல்லையெனில், ஒரு நொடியில் உங்களுக்கு பெரிய ஆபத்து நேரிடலாம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும், மழைக்காலத்தில் பாம்புகள் மிகவும் வித்தியாசமான இடங்களில் காணப்படுவதால், மக்கள் கவனமாக இருக்கவும் எச்சரிக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
snake
,
Viral Photos

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!