ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

சீன் அபோட் மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யூனைடெட் கிங்டமிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் முதலில் செப்டம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஆஸ்திரேலியா – ஸ்காட்லாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடர்கள் செப்டம்பர் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த முக்கிய இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சீன் அபோட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:-

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

Injury setback for Australia ahead of their tour of UK.https://t.co/LT7m7whd6R

— ICC (@ICC) August 15, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா