ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹரியாணாவில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், 10 மணி நிலவரப்படி ஹரியாணாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி…
ஹரியாணா(மொத்தம் 89/90 இடங்கள்)
காங்கிரஸ் – 36
பாஜக – 38
இதர கட்சிகள் – 5
இதையும் படிக்க : ஜம்மு-காஷ்மீர்: இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
ஜம்மு – காஷ்மீர்(மொத்தம் 89/90 இடங்கள்)
இந்தியா கூட்டணி – 50
பாஜக – 22
மக்கள் ஜனநாயக கட்சி – 3
மக்கள் மாநாட்டுக் கட்சி – 3
இதர கட்சிகள் – 2
சுயேச்சை – 9