ஹரியாணாவில் பாஜக; ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணி முன்னிலை! 11 மணி நிலவரம்

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியும், ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது.

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், 11 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிக்க : மெகபூபா முப்தியின் மகள் பின்னடைவு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி…

ஹரியாணா(மொத்தம் 90 இடங்கள்)

காங்கிரஸ் – 35

பாஜக – 49

சுயேச்சை – 4

இதர கட்சிகள் – 2

ஜம்மு – காஷ்மீர்(மொத்தம் 90 இடங்கள்)

இந்தியா கூட்டணி – 47

பாஜக – 28

மக்கள் ஜனநாயக கட்சி – 5

மக்கள் மாநாட்டுக் கட்சி – 2

சுயேச்சை – 8

Related posts

Mumbai: 60-Year-Old Woman Survives High-Risk Tricuspid Valve Replacement Surgery At Wockhardt Hospitals Supported By ECMO

Attendance Of Underprivileged Students Improve Under Social Outreach Programmed By Mumbai School

Kanya Pujan 2024: Date, Shubh Muhurat, Significance And More