ஹரியாணாவில் பெண்களுக்கு ரூ.2,000 ஊக்கத் தொகை: காங். தேர்தல் அறிக்கை!

ஹரியாணா பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று(செப்.18) வெளியிடப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.

தோ்தல் பிரசாரம் உச்சத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான 7 வாக்குறுதிகள்:

  • பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம்

  • ஜாதிவாரிக் கணக்கெடுப்பு

  • மகளிர் மேம்பாடு

  • சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்

  • இளையோருக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்வது

  • குடும்பங்கள் நலன் காப்பது

  • ஏழைகளுக்கு வீடு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது, “மேற்கண்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.

  • மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒருபகுதியாக, சமையல் எரிவாயு உருளை ரூ. 500-க்கு வழங்கப்படும்.

  • 18 – 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

  • சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 6,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்

  • ரூ. 25 லட்சம் வரையிலான சிகிச்சை செலவை அரசே ஏற்று இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வசதி அமல்படுத்தப்படும்

    என்றார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!