ஹரியாணாவில் மாற்றுக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு! தேர்தலிலிருந்து பின்வாங்கிய பாஜக வேட்பாளர்

ஹரியாணா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேர்தலிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளிலும் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் வேட்புமனுவை திரும்பப்பெற இன்றே கடைசி நாளாகும்.

இந்த நிலையில், சிர்சா பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ரோஹ்தாஷ் ஜாங்க்ரா, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

அயோத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பறிக்கும் யோகி ஆதரவு தொழிலதிபர்கள்!

சிர்சா பேரவைத் தொகுதியில், ‘ஹரியாணா லோக்ஹித் கட்சித்’ தலைவர் கோபால் கான்டாவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு பாஜக போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளில் சிர்சா தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 89 இடங்களிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் கடந்த பேரவைத் தேர்தலில் சிர்சா பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபால் கான்டா பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வந்தார். இதையடுத்து இம்முறை அவரை எதிர்த்து சிர்சா தொகுதியில் பாஜக போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை பாஜக தலைமை எடுத்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, பாஜகவை சேர்ந்த ரோஹ்தாஷ் ஜாங்க்ரா தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. சிர்சாவில் கோபால் கான்டா வெற்றி பெற்றால் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால்.. அடுத்த முதல்வர் யார்?

இதுகுறித்து ரோஹ்தாஷ் ஜாங்க்ரா கூறியதாவது, “எனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிட்டேன். இந்த முடிவு இந்திய தேசத்தின் நலனுக்காகவும் ஹரியாணாவின் நலனைக் கருத்திற்கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது. ‘காங்கிரஸ் இல்லாத ஹரியாணா’ உருவாவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். சிர்சா தொகுதியின் வளர்ச்சிக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்றார்.

இப்போது காங்கிரஸை போலவே பாஜக 89 இடங்களில் போட்டியிடுவதால் ஹரியாணாவில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே சரிசமமான போட்டி உருவாகியுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்