ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் உத்தரவு!

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, தேர்தலுக்கு முன் சட்டப்பேரவையைக் கலைக்கும் முன்மொழிவுக்கு முதல்வர் நயாப் சைனி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை(செப்.11) ஒப்புதல் அளித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வியாழக்கிழமை(செப்.12) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதிய அரசு அமையும் வரை நயாப் சைனி முதல்வர் பொறுப்பில் நீடிப்பார்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி