ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் யார் முன்னிலை? 12 மணி நிலவரம்!

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பகல் 12 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியும், ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது.

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில்,பகல் 12 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிக்க : ஜம்மு-காஷ்மீர்: இரு தொகுதிகளிலும் ஒமர் அப்துல்லா முன்னிலை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி…

ஹரியாணா(மொத்தம் 90 இடங்கள்)

காங்கிரஸ் – 34

பாஜக – 50

சுயேச்சை – 4

இதர கட்சிகள் – 2

ஜம்மு – காஷ்மீர்(மொத்தம் 90 இடங்கள்)

இந்தியா கூட்டணி – 51

பாஜக – 29

மக்கள் ஜனநாயக கட்சி – 2

மக்கள் மாநாட்டுக் கட்சி – 2

சுயேச்சை – 6

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்