ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம்!

ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்பதையே பிற்பகல் வரையிலான தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

ஹரியாணாவில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், வாக்கு கணிப்புகளை பொய்யாக்கி பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.

இதையும் படிக்க:ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் யாா் ஆட்சி? இன்று வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:

(பிற்பகல் 1.30 மணி நிலவரம்)

ஜம்மு-காஷ்மீர் (மொத்த தொகுதிகள் 90) :

காங்கிரஸ் கூட்டணி – 52

பாஜக – 27

பிற கட்சிகள் – 11

ஹரியாணா (மொத்த தொகுதிகள் 90) :

காங்கிரஸ் – 35

பாஜக – 48

பிற கட்சிகள் – 07

இதையும் படிக்க: ஹரியாணா: காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி!

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்