ஹரியாணா தேர்தல்: பிரசாரத்தில் களமிறங்குகிறார் அரவிந்த் கேஜரிவால்!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 40 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்களை புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், ஆம் ஆத்மியின் ஹரியாணா பிரிவுத் தலைவர் சுஷில் குப்தா, மூத்த தலைவர்கள் ராகவ் சதா, சஞ்சய் சிங் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

காங்கிரஸுடனான தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஆம் ஆத்மி கட்சி ஹரியாணா தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

தொழில் திட்டங்களுக்கு ரூ.100 கோடி வரை அடமானம் இல்லாமல் நிதி!

அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் இடம்பெற்றுள்ளார்.

அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக, அரவிந்த் கேஜரிவால் ஜூன் 26 ஆம் தேதி தில்லி திகார் சிறையில் இருந்து மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஹரியாணா தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் மற்ற நட்சத்திர பேச்சாளர்களில் மணீஷ் சிசோடியா, சந்தீப் பதக், கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், அதிஷி, சௌரப் பரத்வாஜ் மற்றும் கைலாஷ் கஹ்லோட் உள்பட தில்லியைச் சேர்ந்த அனைத்து மூத்த கட்சித் தலைவர்களும் உள்ளனர்.

புணேவில் 16.4 ஏக்கர் நிலத்தை ரூ.520 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாஃப்ட்!

பகவந்த்மான் சிங் தவிர, பஞ்சாபின் மற்ற நட்சத்திர பேச்சாளர்களில் அமைச்சர்கள் அமன் அரோரா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், சேத்தன் சிங் ஜௌரமஜ்ரா, குர்மீத் சிங் மீட் ஹேயர் உள்பட கட்சி எம்.பி.க்களும் அடங்குவர். ஆம் ஆத்மியின் ஹரியானா பிரிவுக்கு குப்தா தலைமை வகிக்க இருக்கிறார்.

ஹரியாணா தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி இதுவரை 70 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 12) கடைசி நாளாகும். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

15 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம்!

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்