ஹரியாணா தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறது ஆம் ஆத்மி!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று மாநிலத் தலைவர் சுஷில் குப்தா தெரிவித்தார்.

காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.

இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம்பெறாது என்பதை உறுதி செய்யும் வகையில், ஹரியாணா மாநில சட்டப்பேரவையில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைக் கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது.

இதுதொடர்பாக குப்தா கூறுகையில்,

ஆம் ஆத்மி கட்சி 90 இங்களிலும் முழு பலத்துடன் போட்டியிடும். ஊழல் நிறைந்த பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள்.

ஹரியாணாவை குற்றங்களின் தலைநகராக பாஜக மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வேலையின்மை அதிகமாக உள்ளது. மக்கள் மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கியுள்ளன.

பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்.12 கடைசி தேதியாகும். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன. பொதுத்தேர்தலில், ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கியது, அதுவும் தோல்வியடைந்தது.

கடந்த 2019 ஹரியாணா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்