ஹரியானாவில் 19 வயது மாணவரை சுட்டுக்கொன்ற கொடூரம்: 5 பேர் கைது

பசு கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதி 19 வயது மாணவர் சுட்டுக்கொலை: ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

ஹரியானா மாநிலத்தில் பசு கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என கருதி 19 வயது மாணவரை சுட்டுக் கொன்ற கும்பலில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஆர்யன் மிஸ்ரா. இவர் தனது நண்பர்கள் ஹர்ஷித் மற்றும் ஷாங்கி ஆகியோருடன் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி காரில் சென்றுள்ளார்.

அப்போது, பசு கடத்துவோர் காரில் நோட்டமிட்டபடி செல்வதாக நினைத்த ஒரு கும்பல், வாகனத்தை விரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். மேலும், அந்தக் கும்பல் 25 கிலோ மீட்டர் தூரம் காரை விடாமல் துரத்தி சென்றுள்ளனர்.

விளம்பரம்

Also Read:
விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடி… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

அப்போது, பல்வால் சுங்கச் சாவடியில் தடுப்புகளை உடைத்தபடி ஆர்யனின் கார் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் காரை மடக்கிப் பிடித்த கும்பல், ஆர்யனை காரில் இருந்து வெளியே இழுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.

இது தொடர்பான வழக்கில் அனில் கௌஷிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ், சவ்ரவ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
arrested
,
haryana

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!