ஹரியானா தேர்தலில் போட்டியா… வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பிளான் என்ன?

ராகுல் காந்தியைச் சந்தித்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா: காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்க வாய்ப்பு?

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.

90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

விளம்பரம்

இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் வீரர் பஜ்ரங் புனியா இருவரும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பிறகு தாயகம் திரும்பிய வினேஷ் போகத், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்தார்.

அப்போது, வினேஷ் போகத் எந்த கட்சியையும் சாராதவர் என்றும், ‘‘யார் விரும்பினாலும் காங்கிரஸ் கட்சியில் சேரலாம்’’ என்றும் ஹூடா பேட்டி அளித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா கூட்டாக ராகுல் காந்தியை சந்தித்துள்ள நிலையில், இருவருக்கும் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

Also Read:
‘ஆபரேஷன் பேடியா’… உ.பி-யை அச்சுறுத்தும் ஓநாய்கள் – கண்டதும் சுட யோகி ஆதித்யநாத் உத்தரவு

வினேஷ் போகத் ஜூலானா தொகுதியிலும், பஜ்ரங் புனியா பட்லி தொகுதியிலும் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

ஹரியானா தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமை இதுவரை 66 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bajrang Punia
,
Congress
,
Rahul Gandhi
,
Vinesh Phogat

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!