ஹரியானா தேர்தல் தேதி அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் – தேர்தல் ஆணையம்

ஹரியானா தேர்தல் தேதி அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஹரியானா தேர்தல் தேதி அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து 5ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

90 சட்டப்பேரவைகளை கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹரியானாவில் வசிக்கும் பிஷ்னோய் சமூகத்தவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா அக்டோபர் 2ஆம் தேதி வருவதால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக, அகில இந்திய பிஷ்னோய் மகாசபாவின் தேசியத் தலைவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இதையடுத்து ஹரியானா தேர்தல் தேதியை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. ஹரியான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு தேதி மாற்றப்பட்டுள்ளதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். அக்டோபர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Also Read:
தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு… நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

ஹரியானாவில் வசிக்கும் பிஷ்னோய் சமூகத்தவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா அக்டோபர் 2-ம் தேதி வருவதால், இந்த தேதி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Election Commission
,
Election commission of India
,
haryana

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!